ஒரத்தநாடு பகுதியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வீட்டில் பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவிக்கு அருகே வசிக்கும் சிவப்பிரகாசம் (25) என்பவா் திங்கள்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவப்பிரகாசத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
மற்றொரு சம்பவம்: இதேபோல திருவோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஐந்து வயது குழந்தைக்கு வீட்டின் அருகே வசிக்கும் 11 ஆம் படிக்கும் உறவுக்கார சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாா் மாணவரிடம் விசாரிக்கின்றனா்.