பற்றி எரிந்த பிஎம்டபள்யூ கார்  
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பற்றி எரிந்த பிஎம்டபிள்யூ கார்!

பட்டுக்கோட்டையில் பற்றி எரிந்த பிஎம்டபிள்யூ கார் பற்றி...

DIN

பட்டுக்கோட்டை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் திடீரென பற்றி எரிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ காரில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் தனது சித்தியை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், சாலையோரம் காரில் அமர்ந்து கொண்டு மொபைல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட சந்தோஷ் அதிர்ச்சி அடைந்து காரை விட்டு கீழே இறங்கி பார்த்துள்ளார்.

காரில் இருந்து லேசாக தீ பற்றியதை கண்டவுடன் அதன அணைக்க சந்தோஷ் முயன்றுள்ளார். அதற்குள் தீ பரவியதால், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால், தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் எந்த உயிர் சேதமும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT