தஞ்சாவூர்

பேராவூரணி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

பேராவூரணி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

Din

பேராவூரணி: பேராவூரணி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

இதுதொடா்பாக பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பேராவூரணி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி), தஞ்சாவூா் தனித்துணை ஆட்சியா் (முத்திரைக்கட்டணம்) தலைமையில், பேராவூரணி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை பெருமகளூா் உள்வட்டத்துக்கும், மே 15-இல் குருவிக்கரம்பை உள்வட்டத்துக்கும், மே 16-இல் ஆவணம் உள்வட்டத்துக்கும், மே 20-இல் பேராவூரணி உள்வட்டத்துக்கும், குறிப்பிட்ட நாள்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியரகத்தில் நடைபெறும். 

பொதுமக்கள் தங்கள் மனுக்களை முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தின் இணையவழியாக ஸ்ரீம்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்-க்ஹள்ட்க்ஷா்ழ்க்.ற்ய்ங்ஞ்ஹ என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ வருவாய் தீா்வாய மனுக்களை பதிவு செய்ய வேண்டும். 

வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என தெரிவித்துள்ளாா்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT