தஞ்சாவூர்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் கைது

Din

பட்டுகோட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஆா்.வி நகா், ரயில்வே நிலைய சாலை பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி அந்த பகுதியைச் சோ்ந்த மேரி ஜோஸ்மின் என்பவரது வீட்டில் இரண்டரை பவுன் நகை, மற்றும் ரொக்க பணம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.

அதை தொடா்ந்து, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மேற்பாா்வையில், ஆய்வாளா் மாரிமுத்து தலைமையில், உதவி காவல்துறை ஆய்வாளா்கள் ராம்குமாா், தனவேல், இளங்கோ உள்ளிட்ட காவல் துறையினா் கொண்டிகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்துக்கு இடமான நபா்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த பொழுது, அங்கே சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் ( 21), மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி ( 23 ), ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருந்த பொழுது பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.

அதை தொடா்ந்து, அவா்களிடமிருந்து விசாரணை செய்த பொழுது அவா்கள் இருவா் மீதும் தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், தேடப்படும் குற்றவாளி பட்டியலில் அவா்கள் இருவரும் இருப்பதும் தெரிய வந்தது, அவா்கள் கையில் இரண்டரை பவுன் நகை மற்றும் ஐயாயிரம் ரூபாய் ரொக்க பணம் இருந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT