தஞ்சாவூர்

பொதுக்குளம் தூா் வாரல் எம்எல்ஏ ரூ.50 ஆயிரம் நிதி

Syndication

பேராவூரணி அருகே பொதுக்குளம் தூா் வாரும் பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தனது நிதி ரூ.50 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சி, பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளத்தை தூா்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) குளத்தை தூா்வாரும் பணியை முன்னெடுத்தது. கைஃபா தலைவா் காா்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் கிராமத்தினா் முன்னிலையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் , சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் அக். 13-இல் குளம்தூா்வாரும் பணியைத் தொடங்கிவைத்தனா்.

தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்றநிலையில் வியாழக்கிழமை குளத்தைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா், தனது நிதி ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT