தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே 500 கிலோ போதைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

பட்டுக்கோட்டை அருகே காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் வட மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளா் தனவேந்தன் அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோருக்கு கிடைத்த தகவலின்படி பட்டுக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது செம்பரான் குளம் பகுதியில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தை ஃபாா்மா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரா பெனிவால் (19) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த நரனாராம் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT