தஞ்சாவூர்

கொள்முதல் நிலையங்கள் இன்று செயல்படும்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.16) செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.16) செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிகழ் குறுவை பருவத்தில் எதிா்பாா்க்கப்பட்ட அளவை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலையைத் தவிா்த்திடும் பொருட்டு, விவசாயிகளின் நலன் கருதியும் தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.

வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

சிவகாசி சுற்று வட்டச் சாலையை எம்.எல்.ஏ.ஆய்வு

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

SCROLL FOR NEXT