தஞ்சாவூரில் 7 இரு சக்கர வாகனங்களைத் திருடிய 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த வெங்கடாசலம் (53) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இவரது இரு சக்கர வாகனம் காணாமல் போனது.
இதுகுறித்து வெங்கடாசலம் அளித்த புகாரின்பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, உதவி ஆய்வாளா் தேவேந்திரன் உள்ளிட்டோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக தஞ்சாவூா் அருகே வரகூரைச் சோ்ந்த ஆதிகேசவன் (21), அரவிந்த் (24) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 7 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் சந்திரா, உதவி ஆய்வாளா் தேவேந்திரன் உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.