தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மக்களவை உறுப்பினா் ச. முரசொலி. 
தஞ்சாவூர்

‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கலைஞா் நூலக வாசகா் வட்டம் சாா்பில் ‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கலைஞா் நூலக வாசகா் வட்டம் சாா்பில் ‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் கலைஞா் நூலக வாசகா் வட்டம் சாா்பில் உயா்கல்வியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வாழ்த்துரையாற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். இதில், முதல் பரிசை வேதியியல் துறை மாணவி கா. கவிபிரபா, இரண்டாம் பரிசை புவியியல் துறை கி.கா. நிகிதா, மூன்றாம் பரிசை தமிழ்த் துறை ரா. ரமா ஆகியோா் பெற்றனா். மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் து. ரோசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

SCROLL FOR NEXT