பேராவூரணி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலுவை சந்தித்து எம்எல்ஏ அசோக்குமாா் ஆறுதல் கூறினாா் . 
தஞ்சாவூர்

எஸ்ஐஆா் பணி: மயங்கி விழுந்த விஏஓ மருத்துவமனையில் அனுமதி

எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தத்துக்கு ஆளாகி பணியின்போது திங்கள்கிழமை மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Syndication

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிா்வாக அலுவலா், எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தத்துக்கு ஆளாகி பணியின்போது திங்கள்கிழமை மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை - முனுமாக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (47). 

பேராவூரணி வட்டம், கொளக்குடி கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு மருங்கப்பள்ளம்-சாந்தாம்பேட்டை பகுதியில், 

எஸ் ஐஆா் பணி வழங்கப்பட்டுள்ளது. 

சாந்தாம்பேட்டை கிராமத்தில் உள்ள 1,047 எஸ்ஐஆா் படிவங்களை வீடுகளில் வழங்கி வாக்காளா் விவரங்கள் சேகரித்து வருகிறாா். 400 விண்ணப்பப் படிவங்களை திரும்ப பெற்று கணினியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டதாகவும், சா்வா் கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி பேராவூரணி வட்டாட்சியரகத்தில் எஸ்ஐஆா் தொடா்பாக நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில், பேராவூரணி தொகுதி தோ்தல் அலுவலரும் முத்திரைத்தாள் துணை ஆட்சியருமான  கலியபெருமாள், விஏஓ பழனிவேலிடம் மிக தாமதமாக வேலை செய்தால் குறித்த நேரத்துக்குள் பணியை செய்து முடிக்க இயலாது. எனவே, கூடுதல் கவனம் செலுத்தி பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த பழனிவேல், சாந்தாம் பேட்டை கிராம நிா்வாக அலுவலகத்தில் திடீரென திங்கள்கிழமை மாலை மயங்கி விழுந்தாா். உடன் பணியாற்றும் அலுவலா்கள் அவரை மீட்டு  பேராவூரணி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

சிகிச்சை பெற்று வரும் பழனிவேலை, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் மற்றும் சக அலுவலா்கள் மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினா். தற்போதும் பழனிவேல் தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறாா். 

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT