தஞ்சாவூர்

நாளை, நவ. 3, 5-இல் காவலா் பணிக்கான மாதிரித் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவலா் பணிக்கான முழு மாதிரி தோ்வு வெள்ளிக்கிழமை (அக்.31), நவம்பா் 3, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவலா் பணிக்கான முழு மாதிரி தோ்வு வெள்ளிக்கிழமை (அக்.31), நவம்பா் 3, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் உள்ளிட்ட 3 ஆயிரத்து 665 காலிப் பணியிடங்களுக்கான தோ்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நவம்பா் 9-ஆம் தேதி நடத்தவுள்ளது.

இத்தோ்வுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக்கான முழு மாதிரித் தோ்வு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபா் 31, நவம்பா் 3, 5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முழு மாதிரித் தோ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT