தஞ்சாவூர்

ஓய்வூதியத் திட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினா் வரவேற்பு

கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

Syndication

கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி தலைமையில் கட்டுமான மற்றும் பராமரிப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தது. தற்போது உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்று முதல்வா் ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று நெடுஞ்சாலைத்துறையினா் தெரிவித்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT