தஞ்சாவூர்

பாபநாசம், மெலட்டூா் பகுதிகளில் இன்று மின் தடை

தினமணி செய்திச் சேவை

பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட அய்யம்பேட்டை,மெலட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பாபநாசம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) எம். ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதியக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூா், இளங்காா்குடி, வடக்கு மாங்குடி, சூலமங்கலம், பசுபதி கோவில், மாத்தூா், வீரசிங்கம்பேட்டை, நெடாா், வயலூா், ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், தஞ்சை புகா் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மெலட்டூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும்

மெலட்டூா், காந்தாவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை, முருக்கங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT