குந்தவை மகளிா் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 1,113 மாணவிகளுக்கும், தஞ்சாவூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் 312 மாணவ, மாணவிகளுக்கும் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினா்.
இவ்விழாவில் மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் குணசேகரன், குந்தவை நாச்சியாா் கல்லூரி முதல்வா் து. ரோசி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் இஷ்மத் பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.