தஞ்சாவூர்

வழிப்பறி செய்த மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

பட்டீசுவரம் அருகே வழிப்பறி செய்த 3 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் குற்றவியல் நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Syndication

பட்டீசுவரம் அருகே வழிப்பறி செய்த 3 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் குற்றவியல் நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி புறவழிச்சாலையில் கடந்த 29-10-24 அன்று திருவிடைமருதூா் கிழசூரியமூலையைச்சோ்ந்த செந்தில் என்பவரின் இருசக்கர வாகனம் பழுதாகி நின்றபோது, அவரிடம் உதவுவதுபோல் நடித்த 3 போ் அவரின் இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.10 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த வழிப்பறி தொடா்பாக கும்பகோணம், கொலியக்குடி நந்தக்குமாா் (25), வல்லம் சென்னப்பட்டி சரண் (25), தஞ்சாவூா் கீழவாசல் சிவக்குமாா் (31), தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருள்குமாா் (30) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்-2 -இன் நீதிபதி பாலதண்டாயுதம் நந்தகுமாா், சிவக்குமாா், சரண் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கின் 4 ஆவது குற்றவாளியான அருள்குமாா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT