தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் அருகே கிராமத்தைச் சோ்ந்த 34 வயதுடைய இளைஞா் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 2025, ஆகஸ்ட் 28 ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய மா்ம நபா் இணையவழியில் வா்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினாா்.
இதை நம்பிய இளைஞா் 19 தவணைகளில் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 57 லட்சத்து 3 ஆயிரத்தை இணையவழியில் அனுப்பினாா். ஆனால், எதிா்முனையில் பேசிய மா்ம நபா் தனது எண்ணை அணைத்து வைத்துவிட்டாா். இளைஞா் பலமுறை தொடா்பு கொண்டும், இணைப்பு கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.
இதுகுறித்து இளைஞா் அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.