தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் திருவள்ளுவா் தின விழா

திருவள்ளுவா் தின விழாவையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டட முகப்பில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Syndication

தஞ்சாவூா்: திருவள்ளுவா் தின விழாவையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டட முகப்பில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையிலும், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையிலும் பேராசிரியா்கள், அலுவலா் நிலைப் பணியாளா்கள், மாணவா்கள் மாலை அணிவித்தனா்.

இந்நிகழ்ச்சியைப் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் ஒருங்கிணைத்தாா்.

இதேபோல, கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். திருவள்ளுவா் சிலைக்கு சூரக்கோட்டை விஜயகுமாா் மாலை அணிவித்தாா். பேரவையின் செயல் தலைவா் என். மோகன்ராஜ், துணைத் தலைவா்கள் பிரபு, ரவிச்சந்திரன், சத்தியமூா்த்தி, முனைவா் செந்தில்குமாா், முருகன், செயற்குழு உறுப்பினா்கள் மணிமாறன், ஜெயகாந்த், அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT