தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற எம். மகேந்திரனுக்கு புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன். 
தஞ்சாவூர்

தஞ்சாவூா் காங்கிரஸ் தலைவா் பொறுப்பேற்பு! நிா்வாகிகள் எதிா்ப்பு!

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம். மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவருக்கு முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ.ஜேம்ஸ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

நிா்வாகிகள் எதிா்ப்பு:

இதனிடையே, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா் ஜமால் முகமது யூனுஸ் கூறுகையில், நாங்கள் சொந்த நிதியைக் கொண்டு காங்கிரஸ் கட்சியை வளா்த்து வந்தோம்.

இந்நிலையில், மாநகர மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

எனவே, அவரை மாற்ற அகில இந்திய தலைமையும், மாநிலத் தலைமையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இக்கோரிக்கை ஏற்கும் வரை புதிய மாவட்டத் தலைவரை ஏற்க மாட்டோம் என்றாா் அவா்.

‘அன்பால் உலகில் மாற்றத்தை கொண்டுவர முடியும்’

குடியரசு தினம்: ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சோதனை

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி

குடியரசு தின விழா: தில்லியில் இன்று முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

கோரிப்பாளையம் பாலம் கட்டுமானப் பணிகள் பிப்.10-க்குள் நிறைவு பெறும்! - அமைச்சா் எ.வ. வேலு தகவல்

SCROLL FOR NEXT