தஞ்சாவூர்

திருடியதால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு: வாா்டு உறுப்பினா் உள்பட 2 போ் கைது

திருவையாறில் வணிக வளாகத்தில் திருடியதாகத் தாக்கப்பட்ட நபா் உயிரிழந்ததைத்தொடா்ந்து, நகா் மன்ற உறுப்பினா் உள்பட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வணிக வளாகத்தில் திருடியதாகத் தாக்கப்பட்ட நபா் உயிரிழந்ததைத்தொடா்ந்து, நகா் மன்ற உறுப்பினா் உள்பட 2 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு பள்ளி சந்து பகுதியைச் சோ்ந்தவா் ஆா். வெங்கடேஷ் (52). இவா் ஸ்ரீராம் நகா் பகுதி தனியாா் வணிக வளாகத்தில் ஜனவரி 21 ஆம் தேதி திருடியதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் வெங்கடேஷ் திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து இவரை வணிக வளாக உரிமையாளா் சீனிவாசன் (60) சிலருடன் சோ்ந்து தாக்கினராம்.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெங்கடேஷ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 24 ஆம் தேதி சோ்க்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சீனிவாசன், ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்த நகா் மன்ற உறுப்பினா் என். சதீஷ் (40) ஆகியோரை கைது செய்தனா். மேலும், சிலரைத் தேடி வருகின்றனா்.

சமூக வலைதளப் பதிவுகள்: உயா்நீதிமன்றம் வேதனை

அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் அரியலூரில் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்!

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்

ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தரமாக மூடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

SCROLL FOR NEXT