கும்பகோணத்தில் மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
கும்பகோணம் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம்.
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியரகக் கூட்டரங்கில் உதவித் தோ்தல் அலுவலா் வெ.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற முகாமில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் வாக்குபதிவு இயந்திரச் செயல்பாடுகள், அதை கையாளும் முறை குறித்து மண்டலத் அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
திருவிடைமருதூா் வட்டாட்சியரகக் கூட்டரங்கில் வாக்கு சாவடி மைய மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கு தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு தலைமையில் நடைபெற்ற முகாமில் தோ்தல் அலுவலா் சந்திரகுமாா், வட்டாட்சியா் சாந்தமீனா ஆகியோா் தோ்தல் வாக்குப் பதிவு குறித்து விளக்கினா்.