திருச்சி

வைத்தீஸ்வரன்கோவிலில் 4 ரயில்கள் நின்று செல்லும்

சிதம்பரம்- மயிலாடுதுறை இடையே உள்ள வைத்தீóஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன் விரைவு ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி

சிதம்பரம்- மயிலாடுதுறை இடையே உள்ள வைத்தீóஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன் விரைவு ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம்- மயிலாடுதுறைக்கு இடையேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் வண்டி எண் 16183 - சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் உழவன் விரைவு ரயில்  அக்டோபர் 9-ம் தேதி முதல் 2014, ஜூன் 29-ம் தேதி வரையிலும், வண்டி எண் 16184 தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில் அக்டோபர் 10 முதல் 2014, ஜூன் 30-ம் தேதி வரையிலும் நின்று செல்லும்.

வாரம் மூன்று முறை இயக்கப்படும் திருப்பதி- மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் (வண்டி எண் 17407) அக்டோபர் 10-ம் தேதி முதல் 2014, ஜூன் 28-ம் தேதி வரையிலும், மன்னார்குடி- திருப்பதி பாமணி விரைவு ரயில்  அக்டோபர் 11 முதல் 2014, ஜூன் 29-ம் தேதி வரையிலும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT