முகப்பு
திருச்சி

உய்யக்கொண்டான் திருமலையில் மருத்துவ முகாம்

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில்  அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:12 AM
பகிர்:

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில்  அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகர் மாவட்ட 53- ஆவது வார்டு சார்பில் உய்யக்கொண்டான்திருமலை  செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு  மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முகாம் தொடக்க நிகழ்வில், மாநகர் மாவட்ட மாணவரணிச் செயலர் கார்த்திகேயன், பகுதிச் செயலர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், பூபதி,   நிர்வாகிகள் அருள்ஜோதி, ஏர்போர்ட் விஜி, சகாதேவ் பாண்டியன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை தினேஷ்குமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.