பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வா. கோபிநாதன் வரவேற்றார். தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மண்டலத்தலைவர் ஆ. கோபாலகிருஷ்ணன், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொதுச் செயலர் எஸ். சகாய சதீஷ், அருள்தந்தை த. சகாயராஜ், பல்கலைக் கழக ஆசிரியர் சங்க மண்டலத் தலைவநர் எ. லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், கண்டன உரையாற்றினார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். தமிழக விவசாயிகள், தமிழக மக்கள் நலன், தமிழக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழககத்தில் அனுமதிக்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், கூட்டமைப்பின் நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.