மூதாட்டியிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்
துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த சென்னன் மனைவி பெரியம்மா (75) சனிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியே
துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த சென்னன் மனைவி பெரியம்மா (75) சனிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பெரியம்மாவிடம் தண்ணீர் வாங்கிப் குடிப்பது போல நடித்து அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய பெருமாள்மலை அடிவாரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜாவை (27) பொதுமக்கள் பிடித்த விசாரித்த போது அவர் பெரியம்மாவிடம் தங்க சங்கிலி பறித்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை துறையூர் போலீஸில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.