திருச்சி

கண்ணனூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

DIN

துறையூர் ஒன்றியத்துக்குள்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் சுபாஷ் வெளியிட்ட அறிக்கை:
கண்ணனூர் கால்நடை மருத்துவர் சுபாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை கண்ணனூர் ஊராட்சிக்குள்பட்ட சின்னசேலம்பட்டி, பெத்துபட்டி, மருக்கலாம்பட்டி, கொத்தம்பட்டியில் உள்ள 627 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதனை முசிறி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் சையது முஸ்தபா, துறையூர் கால்நடை மருத்துவர் பேபிநிர்மல்  மேற்பார்வை செய்தனர். இதையடுத்து, சனிக்கிழமை (செப்.15) கண்ணனூர், வடக்குவெளி, நல்லியம்பட்டி பகுதியிலும், ஞாயிற்றுக்கிழமை (செப்.16) ஆதனூர், கட்டணாம்பட்டி, கீரிப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, காட்டுக்கருப்பன்கொட்டம் பகுதியிலும், திங்கள்கிழமை (செப்.17)கண்ணனூர்பாளையம், வேலாயுதம்பாளையம், மீனாட்சிபட்டி பகுதியிலும், செவ்வாய்க்கிழமை (செப்.18) கிளியனூர்பட்டி, கோதூர்பட்டி பகுதியிலும், புதன்கிழமை (செப்.19) பொன்னுசங்கம்பட்டி, தேவரப்பம்பட்டி, கல்லிக்குடி பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதியைச் சேர்ந்த கால்நடைகளுக்கு உரிமையாளர்கள் தடுப்பூசி போட்டு பயனடைய  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT