திருச்சி

எச்.ஐ.வி.  குழந்தைகளுடன் கலந்துரையாடல்

DIN

திருச்சி இறகுகள் அமைப்பின் சார்பில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கான விளையாட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.
எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம், அவர்களை ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு இறகுகள் அமைப்பினர் அழைத்துச் சென்று, அவர்களுக்கான விளையாட்டை நடத்தினர். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகளுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டதுடன், ஒரு மாதத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருள்கள், சத்துமாவு, கொண்டைக்கடலை, அரிசி, பேரிச்சம்பழம் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.  இதனை இறகுகள்  அமைப்பின் நிறுவனர் ஜே. ராபின், ஒருங்கிணைப்பாளர் பார்கவி உள்ளிட்டோர் வழங்கினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மரியமெர்சி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT