திருச்சி

ஏப்.18-இல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வணிகர்களுக்கு அறிவுரை

DIN

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமையன்று (ஏப்.18) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக, பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் வீ. கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவைத் தேர்தலையொட்டி,  ஏப்.18ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வணிகர்கள், வியாபாரிகள் தங்களது நிறுவனங்களில்பணியாற்றுவோரையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் ஜனநாயகக் கடமையாற்ற தவறாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.  மேலும், அரசாணையின்படி  ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் அரசாணை பொருந்தும் என்பதால் தவறாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT