திருச்சி

மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன், சாட்டையடி வழிபாடு

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்னப்பசுவாமி, மகாலெட்சுமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். 
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் ஆடி 28-ஆம் பெருக்கை முன்னிட்டு, குறிப்பிட்ட இன மக்களின் பொது தெய்வங்களான சென்னப்ப சுவாமி, மகாலெட்சுமி அம்மாள், பீரேஷ்வர சுவாமி (சிவ பெருமாள்), அகோர வீரபத்திர சுவாமி, ஏழு கன்னிமார்கள், பாப்பாத்தி அம்மன் மற்றும் காவேரியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டிற்கான சிறப்பு வழிபாடு கோயில் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவில், நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேர்த்திக்கடன் வைத்திருந்த பெண்களுக்கு சாட்டையடி வழிபாடும் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு பொங்கலிட்டு படையல், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில்,  குறிப்பிட்ட இன மக்கள் திரளாகக் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT