திருச்சி

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்

DIN

மத்திய அரசு அளிக்கும் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  இந்தத் திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் பிப்.11 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியான விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகலாம். வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், அலைபேசி எண், பட்டா விவரங்களை வழங்கி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT