திருச்சி

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பதினெட்டே முக்கால் பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர். 

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பதினெட்டே முக்கால் பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர். 
மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி தெற்கு தெரு களத்து வீட்டில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி மகன் நல்லுச்சாமி (46). இவர் தோகைமலையில் தையல் கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை நல்லுச்சாமி கடைக்கு சென்ற நிலையில், குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு அவரது மனைவி ஜானகியும் தோகைமலைக்கு சென்றார்.சிறிது நேரத்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக  அளித்த தகவலின்பேரில் தம்பதி வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், பதினெட்டே முக்கால் பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் மணப்பாறை போலீஸார், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT