திருச்சி

என்ஐடியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மே 8-இல் தொடக்கம்

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்பு மே 8ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

DIN


திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்பு மே 8ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
இது குறித்து தேசிய தொழில் நுட்பக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 21ஆம் நூற்றாண்டு கல்வித் திறன்கள் குறித்த மூன்று 
நாள் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் மே 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறுகிறது. 
இந்த வகுப்பிற்கு, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐஇநநத), சமூக அறிவியல் பயன்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சியின் (ஐஙடதஉநந) கீழ் நிதியுதவி வழங்குகிறது.
இதில்,  சமூகம், தன்னுடைமை மற்றும் அறிவாற்றல் சொந்தத் திறன்கள் குறித்து பயிற்சியளிக்கப்படும். மாறிவரும் கல்விச்சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தங்களின் தகுதியையும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தேவையான மென்திறன்கள் மற்றும் பணியிடத்துக்குத் தேவையான வாழ்வியல் திறன்களையும் அளிப்பதே இப்பயிற்சியின்  நோக்கமாகும். 
மேலும், பயிற்சியில் பங்கேற்பது மற்றும் விவரங்களுக்கு வகுப்பு ஒருங்கிணைப்பாளர்களை (எஸ். மேகலா)  0431-2503698, (என். தாமரைச்செல்வன் ) 94437-77217 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT