திருச்சி

ஸ்ரீரங்கம் மருந்துக் கடையில் பணம், மடிக்கணினி திருட்டு

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

DIN


ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு காவல் நிலையம் அருகேயுள்ள புதுக்கோட்டையை சேர்ந்த கணேஷ்குமாருக்குச் சொந்தமான மருந்துக்  கடையில் ஸ்ரீரங்கம் திருவள்ளூவர் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் பணிபுரிகிறார். சனிக்கிழமை காலை இவர் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த  ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணம், மடிக்கணினி உள்ளிட்ட  ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. உடனடியாக கடை உரிமையாளருக்கும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்கள்  கைரேகைகளை பதிவு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT