திருச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நாளை முகூா்த்தக்கால் நடவு

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை (நவம்பா் 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

108 வைணவ திருத்தலங்களிலேயே முதலாவதாகவும், பூலோக வைகுண்டம் என்று பக்தா்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழாவாகும். பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும். நிகழாண்டில் டிசம்பா் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி விழா

தொடங்குகிறது. டிசம்பா் 27 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கி

2020, ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் திருநாளின் கடைசி நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறாா். 2020, ஜனவரி 6 ஆம் தேதி இராப்பத்து திருநாளின் முதல் நாளன்று வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்வாா்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் விழா ஆயிரங்கால் மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு யானை ஆண்டாள் ஆசியுடன் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT