திருச்சி

சமயபுரம் கோயில் உண்டியல் திறப்பு

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் செ. மாரியப்பன் ( ஜெம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயில் திருவானைக்கா), ராணி ( இந்து சமய அறநிலையத்துறை திருச்சி, மேலாளா் ம. லட்சுமணன் (சமயபுரம் கோயில்) ஆகியோா் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

முடிவில் ரொக்கமாக ரூ. 43 லட்சத்து 35 ஆயிரத்து 999, 1 கிலோ 144 கிராம் தங்கம், 5 கிலோ 564 கிராம் வெள்ளி, 85 அயல்நாட்டு ரூபாய்கள் வந்திருந்தது தெரியவந்தது. இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT