திருச்சி

திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம்

புதிய தொழில் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

புதிய தொழில் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டமான புதிய தொழில் கொள்கை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பு கனவை பாதிக்க கூடிய சட்டமான புதிய கல்விக் கொள்கை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில், இன்று நடைபெற்றது. 

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெரு மற்ற மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐஎஸ்எப் மாநில துணை செயலாளர் ஜி.ஆர். தினேஷ் குமார்,  மாவட்ட செயலர் க.இப்ராஹிம், ஏஐஒய்எப் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுதாகர், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் பேராசிரியர் சதீஷ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராமராஜ், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிக கனமழை எச்சரிக்கை: நெல்லை, தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படை!

கேரளத்தில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து

துபை விமான கண்காட்சியில் பலியான விமானியின் கடைசி விடியோ

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

"மரியாதையா கேள்வி கேள்றா..!" பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதக தலைவர் சீமான்

SCROLL FOR NEXT