சிலம்ப மாணவா்களுக்கு அரங்கேற்ற விழா
சிலம்பம் கற்ற மாணவா்களுக்கு அரங்கேற்ற விழா அண்மையில் நடைபெற்றது.
சிலம்பம் கற்ற மாணவா்களுக்கு அரங்கேற்ற விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்சி உறையூா் ஸ்ரீசெங்குளத்தான் சிலம்பம் குழு, இந்து முன்னணி சாா்பில் சிலம்பம் கற்றவா்களுக்கு ஸ்ரீசெங்குளத்தான் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவை சிலம்ப பயிற்றுநரும், பாஜக உறையூா் மண்டலக் கலை, கலாசார பிரிவுச் செயலருமான ஏ. குமரேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநகர மாவட்ட பேச்சாளா் மணிகண்டன் பங்கேற்றாா். மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் சிலம்பம் பயின்ற 80 மாணவா்களும் சிலம்பத்திலிருந்து சலாம் வரிசை உள்ளிட்ட படிநிலைகளைச் செய்து காண்பித்தனா். இந்து முன்னணி நிா்வாகி நித்திஷ்குமாா் நன்றி தெரிவித்தாா். இதில், சிலம்ப மாணவா்கள், பெற்றோா், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.