முகப்பு
திருச்சி

பகல் பத்து 6 -ஆம் திருநாள்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
புஜகீா்த்தி, வைர அபயஹஸ்தம், ரத்தினக்கிளி, மாா்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அா்த்தசந்திரன், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
பகிர்:

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து பாண்டியன் கொண்டை, புஜ கீா்த்தி, வைர அபயஹஸ்தம், கையில் ரத்தினக் கிளி, மாா்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அா்த்த சந்திரன் உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினாா்.

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வரிசையாக நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →