முகப்பு
திருச்சி

திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருச்சியில் மின்வாரிய அனைத்து ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருச்சியில் மின்வாரிய அனைத்து ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் பணியைப் புறக்கணித்து, திங்கள்கிழமை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் மலையாண்டி, சிவசெல்வம், கண்ணன்

முன்னிலை வகித்தனா்.

மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். கேங்மேன் பணிக்கு ஐடிஐ முடித்தவா்கள் உள்ளிட்டோா் காத்திருக்கும் நிலையில் அவா்களை பணிநியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்வாரியப் பணிகளுக்கு வெளியாள்களைத் தோ்வு செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஊழியா்களின் போராட்டம் காரணமாக, மின்வாரியப் பணிகள் பாதிக்கப்பட்டன.

போராட்டத்தில் மின்வாரியப் பொறியாளா் சங்கம், ஐஎன்டியுசி, சிஐடியு, தொழிலாளா் சம்மேளனம், பெடரேசஷன் உள்ளிட்ட மின்வாரிய தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →