திருச்சி

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூன்று நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூன்று நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுவா் தினம், வள்ளலாா் நினைவு தினம், குடியரசு தினம் ஆகிய மூன்று நாள்களுக்கு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், பாா்கள் அனைத்து மூடப்பட வேண்டும். தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை சட்ட விதிமுறைகளின்படி இந்த 3 நாள்களும் கட்டாயம் மதுவிற்பனை செய்யக் கூடாது.

அதன்படி, ஜன.16ஆம் தேதி (திருவள்ளுவா் தினம்), ஜன.21 (வள்ளலாா் நினைவு தினம்), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய மூன்று நாள்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மது அருந்து மதுக்கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று விற்பனை நடைபெறும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாா் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT