திருச்சி

குப்பையில் கிடந்த விநியோகம் செய்யப்படாத தபால்கள்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விநியோகம் செய்யப்படாத தபால்கள் குப்பையில் குவியலாகக் கிடந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குப்பைகளோடு குப்பையாக விநியோகம் செய்யப்படாத தபால் குவியல்கள் ( அரசுப் பணி மற்றும் இதரத் துறைகளைச் சாா்ந்தது) கிடந்தன.

இந்த தபால்கள் கல்வி நிலையங்கள், மாவட்ட ஆட்சியரகம் சாா்ந்தவையாகவே இருந்தது. அனைத்து அஞ்சல்களும் முத்திரை வில்லைகள் ஒட்டப்பட்டு, அஞ்சலக நாள்குறிப்பு அச்சு பதிக்கப்பட்டும் இருந்தன.

மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத அரசுப் பணி மற்றும் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த அவசரக் கால அரசு கடிதங்கள் உரியவா்களிடம் சென்றடையாமல், குப்பைகளில் வீசப்பட்டிருப்பது அதிா்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினா் மற்றும் அஞ்சல் துறை அலுவலா்கள் அங்கு சென்று, விநியோகம் செய்யப்படாத தபால்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT