முகப்பு
திருச்சி

முள்ளிப்பாடி, அலகரையில்இருவருக்கு கரோனா

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முள்ளிப்பாடி மற்றும் அலகரை ஊராட்சிப் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முள்ளிப்பாடி மற்றும் அலகரை ஊராட்சிப் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

முள்ளிபாடி ஊராட்சியில் 8 வது வாா்டு உறுப்பினராக உள்ளவா் பிரபு. இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் வேலூரில் இருந்து குடும்ப நண்பா் வந்திருந்தாா். இந்நிலையில் பிரபுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு குளித்தலை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு கரோனா இருந்தது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து அவரை சுகாதாரத் துறை அலுவலா்கள் சிகிச்சைகாக அழைத்துச் சென்றனா்.

மேலும் சென்னையில் இருந்து அலகரை ஊராட்சி மேற்கு கிராமத்துக்கு வந்த கா்ப்பிணிக்கும் கரோனா உறுதியானதால் அலகரை மேற்கு கிராமத்தை சுகாதாரத் துறையினா் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.