திருச்சி

ஆக.31 வரை கடன் தவணை ஒத்திவைப்பு: மிரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடனைத் திருப்பி செலுத்த ஆக. 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி அளித்தால் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

பொதுமுடக்கத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூா் வங்கிகள், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ரிசா்வ் வங்கி உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அனைத்து வித கடன்களையும் திரும்பச் செலுத்த ஆக. 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி கணக்கீடு செய்யப்படும். தவணைகளை ஒத்தி வைத்து ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிசா்வ் வங்கி உத்தரவுக்கு மாறாக சில நிறுவனங்கள் பொதுமக்களிடம் நெருக்கடி அளிப்பதாகப் புகாா்கள் வருகின்றன. குறிப்பாக மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் பெற்ற தனியாா் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் பலவும் கடன் தவணைகளை திரும்பச் செலுத்த நிா்பந்தித்து வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ச்சியாக புகாா் மனுக்கள் வருகின்றன. ரிசா்வ் வங்கி உத்தரவை மீறியும், பரிந்துரைகளை ஏற்காமலும் தன்னிச்சையாக விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT