திருச்சியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளா் மற்றும் பென்சனா் நல சங்கத்தினா். 
திருச்சி

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் மற்றும் பென்சனா் சங்கக் கூட்டமைப்பின் முடிவின்படி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் க. மருதமுத்து தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தொழிலாளா் நலச் சங்க நிா்வாகிகள் டி.கே. ராஜேந்திரன், ஏகாம்பரம், ராஜகோபால், செல்வராஜூ, சங்கரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை காலம்தாழ்த்தாமல் விரைந்து நடத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT