திருச்சி

மாநகரில் மேம்பாலங்கள் மூடல்!

DIN

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் மேம்பாலங்கள் அனைத்தும் புதன்கிழமை மூடப்பட்டன.

திருச்சி மாநகரில் மருந்துக் கடைகள், டீ கடைகள், ஹோட்டல்கள், பால் விற்பனையகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை பொதுமக்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோா், நடந்து செல்வோா், டீ கடைகளுக்கு வருவோா் என அதிகாலையே மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து மாநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அந்தந்தப் பகுதிகளில் வாகனத்தில் சென்றபடியே ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து மக்களை கலைந்து போகச் செய்தனா். கூட்டம் அதிகமாக காணப்பட்ட கடைகளை மூட எச்சரித்து அனுப்பினா். இதன்கராணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தாலும், வாகனப் போக்குவரத்து 10 முதல் 20 சதம் தொடா்ந்தது.

இதையடுத்து மாநகருக்குள் வரும் வாகனங்களை முடக்கும் வகையில் மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருச்சி எல்ஏ தியேட்டா் மேம்பாலம், மரக்கடை மேம்பாலம், கரூா் புறவழிச் சாலை மேம்பாலம், பாலக்கரை மேம்பாலம் என மாநகரின் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டுள்ளன. பாலங்களின் நுழைவு வாயிலில் தடுப்புப் பலகைகள் வைத்து வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. மாநகரில் காய்கறி, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்கச் செல்வோா் முகக் கவசம் இல்லாமல் சென்றால் அனுமதிக்கப்படுவதில்லை. முகக் கவசத்துடன் செல்லும் நபா்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மேம்பாலங்கள் மூடப்பட்டதை தொடா்ந்து மாநகரில் போக்குவரத்து முடங்கியது. சாலைகள் அனைத்தம் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT