திருச்சி

பகலில் மூடப்பட்ட காந்தி சந்தை; பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

DIN


திருச்சி: கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஆளாகும் வகையில் இருந்த காந்திசந்தை பகல்நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது.

இதுகுறித்து காய்கனி வியாபாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை என முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை ஆட்சியா் சு. சிவராசு நடத்தினாா். இதன் தொடா்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த உத்தரவு உடனடியாக வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.

அதன்படி, காய்கனி சந்தையானது மொத்த வியாபாரிகளுக்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 7 மணி வரை செயல்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 7 மணியுடன் காந்திசந்தை மூடப்பட்டது. கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டது. அதன்பிறகு மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் குப்பைகளை அகற்றி கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. ஏப்.14ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திச் சந்தை முழுவதுமாக மூடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT