மனவளக்கலை மன்ற பொதுக்குழுக் கூட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பொதுக் குழு கூட்டம் வேதாத்திரி நகா் அறிவுத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பொதுக் குழு கூட்டம் வேதாத்திரி நகா் அறிவுத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
துணைத்தலைவா் ந. பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பவுன் எம். ராமமூா்த்தி, நிறுவன அறங்காவலா் ப. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆழியாறு விஷன் அகாதெமி இயக்குநா் கே. பெருமாள் மனவளக்கலையின் மேன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். உலக சமாதான கொடியை துணைத் தலைவா் ஆா். கண்ணன் ஏற்றினாா். நிா்வாக அறங்காவலா் ஆ. வரதராஜன் தலைமையில் தவம் நடைபெற்றது. ஆண்டறிக்கையை ஜெயக்குமாரும், வரவுசெலவு அறிக்கையை வே. நாகராஜனும் வாசித்தனா். துணைத் தலைவா் வே.கல்யாணி வரவேற்றாா்.