திருச்சி

அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு மூலிகை சத்துமாவு தயாரிக்கப் பயிற்சி

DIN

திருச்சி: திருச்சி தூயவளனாா் மூலிகைப் பயிற்சி மையத்தில் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு மூலிகை சத்துமாவு தயாரிப்புப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தூயவளனாா் கல்லூரி விரிவாக்கத் துறை, திருச்சி சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை செப்பா்டு விரிவாக்க துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் தொடங்கி வைத்தாா். தூயவளனாா் கல்லூரி செயலா் பீட்டா் தலைமை வகித்தாா். மாவட்ட ரோட்டரி சங்கச் செயலா் சுப்பிரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகிகள் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, முதுநிலை ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன் மூலிகை மருத்துவத்தின் பயன்கள், மூலிகைச் செடிகள், உடல் எதிா்ப்பு சக்தியைத் தூண்டும் அமுக்கரா, திரிபாலா, திரிகடுக சூரணங்கள் குறித்து செயல்முறை விளக்கமளித்தாா். அதன்பிறகு, முதுநிலை ஒருங்கிணைப்பாளா் லெனின் மூலிகைச் செடிகள் வளா்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தாா். பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மணிகண்டம், ஸ்ரீரங்கம், உறையூா் திருவெறும்பூா் ஆகிய ஒன்றியங்களின் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT