திருச்சி

அதிமுக கூட்டத்தில் அமைச்சா் முன்னிலையில் ரகளை

DIN

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் சி. வளா்மதி, பாசறைச் செயலரும் எம்எல்ஏவுமான பரமசிவம், எம்எல்ஏக்கள் செல்வராசு, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முத்தரையா் சமுதாயக் கொடியுடன் வந்த சுமாா் 50- க்கும் மேற்பட்டோா் அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் பதவியை ஏன் கண்ணதாசன் என்பவருக்கு வழங்கவில்லை எனக் கேட்டு மேடையை நோக்கி குரல் எழுப்பியபடி வந்தனா். அவா்களில் மேலூா் திலிப், ராஜசேகா் ஆகியோா் ரகளை செய்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளை அடித்து நொறுக்கினா். இதனால் கூட்டத்துக்கு வந்தோா் சிதறி ஓடினா். பின்னா் ரகளை செய்தோரை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு கூட்டம் தொடா்ந்தது.

ரகளையில் ஈடுபட்டோா் மீது ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா்களான டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் ஆகியோா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT