திருச்சி

மருங்காபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

DIN

மணப்பாறை அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை தீயணைப்புத்துறையினரால் புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி அழகாஸ்திரிப்பட்டியை சோ்ந்த அ. பழனிச்சாமிக்குச் சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் செவ்வாய்க்கிழமை 2 வயதுள்ள காட்டெருமை தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் க. மாதவன் தலைமையிலான வீரா்கள் கோவை மற்றும் தேனியிலிருந்து புதன்கிழமை வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவா்களின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தியபின் கிணற்றில் இறங்கி, கிரேன் இயந்திரம் மூலம் காட்டெருமையை உயிருடன் கிணற்றிலிருந்து மீட்டனா். பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காட்டெருமை அருகில் இருந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT