முகப்பு
திருச்சி

மொண்டிப்பட்டியில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் இத்திட்டத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் தொடங்கி வைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடக்கி வைத்தனா். பின் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட வாகனத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா்கள் பயனாளிகளின் வீடு தேடிச் சென்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கினா். முடக்குவாதத்தில் சிகிச்சை பெறுவோரின் வீடு தேடிச் சென்று அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ப. அப்துல்சமது, எம். பழனியாண்டி, அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், காடுவெட்டி ந. தியாகராஜன், எஸ். இனிகோஇருதயராஜ், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் ந. சிந்துஜா, மணப்பாறை வட்டாட்சியா் எம். லஜபதிராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மணப்பாறை ஒன்றியக் குழு பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலா் சி. ராமசாமி, நகரச் செயல கீதாமைக்கேல்ராஜ், மமக மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், காங்கிரஸ் மாவட்டச் செயலா் மொண்டிப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.